• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இரண்டு நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை ஆண் காட்டு யானை

ByG. Anbalagan

May 7, 2025

உதகை தொட்டபெட்டா மலைச் சிகர வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டு யானையை இரண்டாவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருக்கும் காட்டு யானையை ட்ரோன் கேமராவில் கண்டறிந்த வனத்துறையினர்  பட்டாசுகள் வெடித்து யானையை விரட்ட முயற்சித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை தொட்டபெட்டா மலைச் சிகரம் வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை ஆண் காட்டு யானையை விரட்டிப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காட்டு யானையை கண்காணித்து விரட்டும் பணியில் மாவட்ட வன அலுவலர் தலைமையில் வனக்கால் நடை மருத்துவர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கரடு முரடான வனப்பகுதியில் சென்று மரங்கள் செடிகளுக்குள் மறைந்திருக்கும் காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.

இன்று முழுவதும் ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானையை பல பகுதிகளில் தேடிய வனத்துறையினர் ஒரு வழியாக காட்டு யானை ஓரிடத்தில் நின்று கொண்டிருந்த காட்சிகளை பார்த்தனர்.

யானை இருக்கும் இடத்தை கண்டறிந்த வனத்துறையினர் யானையை சுற்றி வனத்துறை ஊழியர்கள் அதன் நகர்வுகளை நுண்ணிப்பாக கவனித்து பின் தொடர்ந்து வருகின்றனர் புதருக்குள் மறைந்திருந்த யானையை வெளியே வரவழைக்க பட்டாசுகள் வெடித்த வனத்துறையினர் எந்த நேரத்திலும் யானை சாலையில் உலா வரும் என்பதால் குழுவாகப் பிரிந்து காட்டு யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

உதகையில் காட்டு யானை நடமாடி வரும் தொட்டபெட்டா மலை சிகர வனப்பகுதியில் பகல் நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் யானையை தேடி விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

காட்டு யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரம் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்தது மீண்டும் காட்டு யானை அதே பகுதிகளில் சுற்றி திரிவதால் தொட்டபெட்டா மலைச்சிகரம் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிகிறது.