• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தேவகோட்டை நகரம் சார்பாக இப்தார் நிகழ்சியுடன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்வு தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை அல்மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர தலைவர் அன்ஸர் அலி தலைமையில் நடைபெற்றது, இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தேவகோட்டை மற்றும் கண்ணங்கோட்டை பகுதி ஜமாத்தார்கள், தேவகோட்டை இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பின் தோழர்கள், சகோதர அமைப்பு சார்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி நகர மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா, தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயினுலாபுதீன், மாநில தொண்டரணி துணைச்செயலாளர் பர்கி, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இம்ரான்கான், மாவட்ட பொருளாளர் அன்சாரி, மாவட்ட துணைத்தலைவர் சேட்முஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற கட்சியிலிருந்து பிரிந்து பலர் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டதுடன் உளப்பூர்வமாக மக்கள் பணி செய்ய உறுதி ஏற்றுக்கொண்டனர்.