• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

தேர்வு விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் தேனி மாவட்ட எல்லையில் ஒரு ஜாலி டூர்….

சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான இடம் இடுக்கி மாவட்டம். பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல், வனாந்தரங்கள், மிரட்டும் மலைகள், கண்ணுக்கனிய பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் நடைபாதைகள் சுற்றுலாப் பயணியருக்கு கிடைக்கும் சிறந்த அனுபவத்தின் பகுதிகளாகும். பள்ளி இறுதித்தேர்வு விடுமுறையில் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு டூர் செல்ல தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள “கடவுளின் சொந்த நாடு” என்னும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள, பார்க்கவேண்டிய சில குளு…குளு இடங்கள்……

தேக்கடி:
தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளியிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலம் தேக்கடி. முல்லைப்பெரியாறு அணையில் தேங்கி நிற்கும் நீர்தேக்கப் பரப்பின் இயற்கை சூழலில் வாழும் விலங்குகளை கண்டு ரசித்தவாறு படகுச்சவாரி செய்வது தேக்கடியின் சிறப்பு. மேலும் தேக்கடி வனப்பகுதியில் யானைச்சவாரி, டைகர்வியூ என சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சி அடையச்செய்யும் பல சிறப்பு அம்சங்களும் உண்டு. கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கேரள வனத்துறையினரின் படகுகள் தேக்கடி நீர்தேக்கப்பரப்பில் சுற்றுலாப்பயணிகளுக்காக சவாரி சென்று வருகிறது. இயற்கை எழிலை ரசித்துச்செல்லும் சுற்றுலாப்பயணிகள் குமுளியிலிருந்து தேக்கடி படகுத்துறைக்கு நடந்து செல்கின்றனர். அனைத்து தரப்பு சுற்றுலாப்பயணிகளும் விரும்பி தங்கும் வகையில் தேக்கடி, குமுளியில் பல்வேறு கட்டணங்களில் நட்சத்திர ஓட்டல் முதல் சாதாரண ஓட்டல்கள் வரை உண்டு.
மூணாறு:
தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறு கடல் மட்டத்திலிருந்து 1600 முதல் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால் மூணாறு ஆனது. மூணாறுக்கு அருகில் உள்ள, நீலகிரி வரையாடுகள் உள்ள இரவிகுளம் தேசியப்பூங்கா, இந்த பூங்காவிற்கு உள்ளே அமைந்துள்ள, தென்னிந்தியாவிலேயே உயரமான 2700 மீட்டர் உயரம் கொண்ட ஆனைமுடி சிகரம், மாட்டுப்பெட்டி கல்கட்டு அணை, ஏரி படகுச்சவாரி, கேரளாவின் முதல் நீர்மின் திட்டமான பள்ளிவாசல், அருகே உள்ள சின்னக்கனால் அதன் நீர்வீழ்ச்சியும் பார்த்து ரசிக்க வேண்டியவைகள். அனைத்து ரக கட்டணங்களிலும் தங்கும் விடுதிகள் உண்டு.

ராமக்கல்மேடு:
தேனி மேற்கு பகுதி தமிழக எல்லையான கம்பம் மெட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ராமக்கல் மெட்டு. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5ஆயிரம் அடி உயரத்திலுள்ள இப்பகுதி ஆசியாவில் அதிக காற்றுவீசும் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் கத்தரி வெயிலிலும் வேர்க்காது. இங்கு இடுக்கி அணை உருவாக காரணமாக இருந்த குலும்பன் என்ற ஆதிவாசி குறவன், மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் 40 அடி உயர பிரமாண்டமான சிலை மற்றும் கழுகு சிலை சுற்றுலாப்பயணிகளை கவரும். மலை உச்சிப்பகுதியிலுள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகளையும், பைனாகுலர் மூலம் தமிழகத்தின் இயற்கை எழிலையும், கண்டு ரசிப்பதும் கண்களுக்கு விருந்தாகும்.

இடுக்கி அணை:
கம்பம்மெட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இடுக்கி. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணையான இடுக்கி ஆர்ச்டேம் இங்குள்ளது. 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்திமலையையும் இணைத்து 555 உயரத்திற்கு கட்டப்பட்ட அணை இது. புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர். 555 அடி உயர அணையில் ஸ்பீடு போட்டில் சவாரி செய்வது சுற்றுலாப்பயணிகளுக்கு திரில்லான அனுபவம். இதை அடுத்து செறுதோணி அணை, பார்க், மற்றும் மூலமட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையம் பார்க்க கூடியவை.
வாகமண்:
குமுளியிலிருந்து ஏலப்பாறை வழியாக 45 கிலோ மீட்டரில் உள்ளது வாகமண். கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வாகமண்ணில் தற்கொலை விளிம்பு, மொட்டைக்குன்றுகள், பைன்மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம், ஏரியில் கால்மிதி படகு சவாரி போன்றவை சுற்றுலாப்பயணிகள் கண்டு, அனுபவித்து ரசிக்க வேண்டியவை. இங்குள்ள பைன் மரக்காடுகளில் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வாகமண் திரைப்பட நகரமாக மாறி வருகிறது. கூட்ட நெரிசல் இல்லாத அற்புத மலைப்பிரதேசம். சுற்றுலாப்பயணிகளும் தங்கும் வகையில் பல்வேறு கட்டணங்களில் லாட்ஜ்கள் உண்டு.

கெவி:
தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிக்குள் அமைந்திருக்கு சுற்றுலாப்பகுதி கெவி. கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று திரும்ப கேரள வனத்துறையின் “ஜங்கிள் சபாரி” என்ற பஸ் இயக்குகின்றனர். வண்டிப்பெரியாறு வள்ளக்கடவு வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து 16 கிலோமீட்டர் வரை செல்லும் 3 மணிநேர பயணத்துக்கு நபர் ஒன்றுக்கு 500 ரூபாய் கட்டணமாகவும், 50 ரூபாய் நுழைவுக்கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. வண்டியில் இருந்தவாறே வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். கெவி சென்று திரும்பும் வரை, இடையில் பயணிகள் வண்டியிலிருந்து இறங்க அனுமதிப்பதில்லை.

பருந்தும் பாறை:
குமுளியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து ஐந்தாயிரம் அடி உயரத்தில் உள்ளது பருந்தும்பாறை. இங்குள்ள இயற்கை அழகும், தற்கொலை பாறை விளிம்புகளும், தாகூர் பாறையும் ( மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் தலையைப்போன்ற அமைப்பு உள்ளதால் தாகூர்பாறை என பெயர் பெற்றது). குறிஞ்சி மலர்களும் ரசிக்கக் கூடியவை. சபரிமலை மண்டல காலத்தில் மகரஜோதியை தரிசிக்க ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் இங்கே வருகின்றனர்.

செல்லார் கோவில் மெட்டு:
குமுளியை அடுத்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செல்லார் கோவில்மேடு. இங்குள்ள அருவிக்குழி மலைப்பகுதியில் நீர்வீழ்ச்சி உள்ளதால் இதை கேரளாவில் அருவிக்குழி நீர்வீழ்ச்சி என அழைக்கின்றனர். இந்த அருவிக்குழி நீர்வீழ்ச்சி தான் தேனி மாவட்டம் கூடலூர் மந்தை வாய்க்கால் பகுதியில் வரும் சுரங்கனாறு நீர்வீழச்சி. மிக உயர்ந்த மலைப்பகுதி. இங்கிருந்து தமிழகத்தின் இயற்கை எழிலைக்காணலாம். தற்போது செல்லார்கோவில் வரும் சுற்றுலாப்பயணிகளுகளுக்காக அருவி உருவாகும் இடத்தில் செக்டேம் கட்டி கால்மிதி படகு (பெடல்போட்) அமைக்க இடுக்கி மாவட்டம் சக்குபள்ளம் கிராமப்பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.

அஞ்சுருளி:
கம்பம் மெட்டில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் (கட்டப்பனையிலிருந்து ஏலப்பாறை செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில்) உள்ளது அஞ்சுருளி. இடுக்கி அணையின் ஆரம்பம் இதுவே. இரட்டையார் அணையிலிருந்து அஞ்சுருளிக்கு தண்ணீர் வரும் டணல் (குகை) இங்கு சிறப்பு மிக்கது. இரட்டையார் முதல் அஞ்சுருளி வரை 5.5 கிலோமீட்டர் நீளமும், 20 அடி அகலமும் உள்ள இந்த டணல் 1974&ல் தொடங்கி 1980&ல் முடிக்கப்பட்டது. ஐந்து உருளி (அண்டா) கவிழ்த்தி வைத்ததுபோல் மலைகள் இருந்ததால் ஆதிவாசி குடிகள் இதற்கு அஞ்சுருளி எனப்பெயரிட்டுள்ளனர். ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடம்.

அய்யப்பன்கோவில் மற்றும் தொங்குபாலம்.
கட்டப்பனையிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் பெரியாற்றின் குறுக்கே அய்யப்பன்கோவில் பஞ்சாயத்து மற்றும் காஞ்சியாறு ஊராட்சியை இணைக்கும் இரும்பு தொங்கு பாலம். 2012ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. திரைப்படங்களில் முலம் பிரபலமானது. இந்த தொங்கு பாலம். தற்போது தனிப்பாடல்கள் மற்றும் திருமண ஆல்பங்களுக்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தொங்கு பாலத்தின் இடதுபுறம் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பழமையான ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் மற்றொரு சிறப்பு பகுதியாகும். கனமழையின் போது இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது கோயிலும் அதன் சுற்றுப்புறமும் நீரில் மூழ்கும். இந்த சமயங்களில் பக்தர்கள் தெப்பம் மற்றும் படகுகளில் கோவிலுக்குச் சென்று வழிபடுவர்.

அம்மச்சி கொட்டாரம்.
குமுளியிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திரல் குட்டிக்கானம் அருகே உள்ளது அம்மச்சி கொட்டாரம். குட்டிக்கானம் பனி படர்ந்த மலைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு 200 ஆண்டுகள் பழமையான அம்மாச்சிக்கொட்டாரம் (முன்பெல்லாம் ஆட்சியாளர்களின் மனைவிமார்கள் அம்மச்சி (அம்மா) என்று அழைப்பார்கள்) என்னும் அரண்மனை 25 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதியில் மரங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. ராணி சேதுலக்ஷ்மி பாய், திருவிதாங்கூரின் கோடைகால தலைநகராக இந்த அம்மச்சிக்கொட்டாரத்தைப் பயன்படுத்தினார். இந்த அரண்மனையிலிருந்து இரண்டு ரகசிய நடைபாதைகளும், ஒரு சுரங்கப்பாதையும் உள்ளன. 5 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை அரண்மனையிலிருந்து பீருமேடு ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கு செல்கிறது என்கிறார்கள். பழமையான அரண்மனையை நேரில் பார்க்கும் போது சுற்றுலாப்பயணிகளுக்கு திகில் நிறைந்த பேய்மாளிகை படங்களை நினைவூட்டும். இவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் குளு,குளு இடங்கள் நம் அருகில் இருக்க இந்த பொதுத்தேர்வு விடுமுறையில் குடும்பத்துடன் ஒரு ஜாலி டிரிப் சென்று வரலாமே.

செய்தி தொகுப்பு: விஜி ஜோசப் (தலைமை செய்தியாளர்)

  • ஒருநாள் பயிற்சி தமிழ்ப் பல்கலைக்கழகம்..,
    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கு’ என்றத் தலைப்பில் ஒருநாள் பயிற்சி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையும் மற்றும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பாக நடைபெற்றது. முதலில் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கு.க.கவிதா வரவேற்புரை வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பெ.பாரதஜோதி தலைமையுரை ஆற்றினார். அடுத்து தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் இ.மாதவன் வாழ்த்துரை வழங்கினார். பின்பு… Read more: ஒருநாள் பயிற்சி தமிழ்ப் பல்கலைக்கழகம்..,
  • உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு கள ஆய்வு..,
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பொருளியல் மாணவர்கள் உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு அழகம்மாள்புரத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை கள ஆய்வு செய்தனர். இந்நிலையில் பழங்குடியின மலைவாழ் மக்களின் உடைகள் தேவைகள் குறித்து பள்ளியின் பொருளியல் துறை ஆசிரியர் முருகேசன் குயாஸ் தொண்டு நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று குயாஸ் தொண்டு நிறுவனர் சந்திரலேகா புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். மேலும் சந்திரலேகா பேசும்பொழுது… Read more: உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு கள ஆய்வு..,
  • சத்குருவின் தீபாவளி வாழ்த்து செய்தி..,
    தீபாவளி திருநாளை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இருளை அகற்றுவதே ஒளியின் இயல்பு, நீங்களும், நீங்கள் தொடும் அனைத்தும் பிரகாசமாக ஒளிர உங்களுக்குள் வெளிச்சம் பரவட்டும். உங்கள் தீபாவளி ஒளிமயமாக ஜொலிக்கட்டும்” எனக் கூறியுள்ளார். இது தொடர்பான காணொளியில் சத்குரு பேசியுள்ளதாவது, “தீபாவளி என்பது ஒளியின் பண்டிகை, நமக்கு ஏன் ஒளி தேவையென்றால் வெளிச்சத்தில் மட்டுமே நாம் தெளிவாகப் பார்க்க முடியும். நம்மால் தெளிவாகப் பார்க்க முடியாவிட்டால், நம்மால் சிறப்பாக நடக்கவோ, ஓடவோ, வாழ்க்கையில் எதையும்… Read more: சத்குருவின் தீபாவளி வாழ்த்து செய்தி..,
  • வாழ்க்கையில் முன்னேற துணிச்சல் லட்சியம் வேண்டும்..,
    தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க 2025- ஆம் ஆண்டுக்கான சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா,சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் நடிகர் சங்க துணைத் தலைவருமான பூச்சி.எஸ்.முருகன், ஆவடி காவல் துணை ஆணையர் நா.இளங்கோவன்,தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்,நடிகை ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய… Read more: வாழ்க்கையில் முன்னேற துணிச்சல் லட்சியம் வேண்டும்..,
  • மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை விமான நிலையம்..,
    மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான செய்திகள் துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவையும் இயங்கி வருகிறது. இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் சமீபத்தில் 24 மணி நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினம் சுதந்திர தினத்தன்று விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் பயணிகளுக்கு… Read more: மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை விமான நிலையம்..,
  • ஸ்ரீ பிரளய நாதசிவாலயத்தில் பிரதோஷ விழா..,
    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்திற்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது விழாவையொட்டி சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணை நெய் திரவியம் மஞ்சள் பொடி மா பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தனர் அப்போது பக்தர்கள்… Read more: ஸ்ரீ பிரளய நாதசிவாலயத்தில் பிரதோஷ விழா..,
  • மாவட்ட மகளிரணி வசந்தி வாசு அறிவிப்பு..,
    பிஜேபி மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின்  நேரடி ஒப்புதலுடன். மாவட்ட தலைவர் தங்ககென்னடி. அவர்களின் நல்லாசியுடன் மாவட்ட மகளிரணி வசந்தி வாசு அவர்களின் அறிவிப்பு விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒன்றிய மகளிரணி.  பொறுப்பாளராக திருமதி திலகவதி ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவும் டெல்லி பிஜேபி அலுவலகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மகளிரணி சம்பந்தமான புகார்கள் திலகவதியிடம்  தெரிவிக்கலாம் எனவும். பிஜேபி  அலுவலகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • கோவை பி.எஸ்.ஜி., நிறுவன நாள் விழா..,
    கோவை பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அண்டு சன்ஸ் அறநிலையத்தின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் முன்னாள் மாணவர்களான அமெரிக்க தொழிலதிபர் கோபால் சடகோபால், கல்பர் இன்ஜினியரிங் மற்றும் கான்டிரேக்டிங் எமிரேட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர், சி.எஸ்.ஐ.ஆர். முதன்மை விஞ்ஞானி மற்றும் ஆலோசகர் பாரிவள்ளல், ஹெலிக்ஸ் ஓபன் ஸ்கூல் லெர்னிங் சென்டர் இணைச் செயலர்… Read more: கோவை பி.எஸ்.ஜி., நிறுவன நாள் விழா..,
  • கோவையில் மனஆரோக்கியம் பெற்ற தீபாவளி..,
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது… நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா… Read more: கோவையில் மனஆரோக்கியம் பெற்ற தீபாவளி..,
  • ப்ரீமியம் திரைப்பட அனுபவத்தை வழங்கும் எபிக் ஸ்க்ரீன் துவக்கம்..,
    ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா எனும் பிரபல மல்டி ப்ளெக்ஸ் கியூப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆர்-எபிக் ராஜபாளையம்’ எனும் புது அரங்கத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அரங்கில் கியூப் நிறுவனத்தின் பிரீமியம் பெரிய வடிவ திரை மற்றும் தியேட்டர் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இது தென் தமிழகத்தில் உள்ள ரசிகர்களுக்கு உலகத் தரத்திலான திரைப்பட அனுபவத்தை வழங்கும். மதுரையில் எபிக் திரையரங்கிற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, வழக்கமான திரைப்பட அனுபவத்தை மறுவரையறை செய்யும் பயணத்தை ரேடியன்ஸ்… Read more: ப்ரீமியம் திரைப்பட அனுபவத்தை வழங்கும் எபிக் ஸ்க்ரீன் துவக்கம்..,