உலகமெங்கும் வருகிற டிசம்பர் 25 கிறிஸ்மஸ் திருநாள் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில்.. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைந்த கிறிஸ்மஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி ஆர்.சி துவக்க பள்ளியில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஆர்.சி, சி.எஸ்.ஐ, டி.இ.எல்.சி, ஏ.ஜி, மாரநாதா உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட சபைகள் கலந்து கொண்டு ஆடல், பாடல், போதனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இந்த விழாவில் ஏராளமான அனைத்து சபைகளின் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்மஸ் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினர்.




