விருதுநகர் மாவட்ட அஇஅதிமுகழகம் (மே) மற்றும் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி & சிவகாசி தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் *சிவகாசி சாட்சியாபுரம் எம்.ஜி.ஆர் திடலில் நடைபெற்றது

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிமிக்க சிறப்புரை நிகழ்த்தினார்கள். கூட்டத்திற்கு கழகத்தின் காவலர் கழக அமைப்புச்செயலாளர்
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி ராஜேந்திர பாலாஜி அவர்கள் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர் ஜான் மகேந்திரன் கழக இளம் பேச்சாளர் மகேஸ்வரன் குருவையா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பொதுக்கூட்டத்தில்… மாநில, விருதுநகர் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு ஊராட்சி கிளைக்கழக நிர்வாகிகளும் பிற அணி சார்ந்த நிர்வாகிகளும், மகளீரணி பொறுப்பாளர்களும், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் & நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் பலராம் அவர்கள் சிறப்புடன் செய்திருந்தார்.




