குரோம்பேட்டையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, புதுவாழ்வு ஜெம்ஸ் பேராலயத்திலிருந்து தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரி வரை 5 கிலோமீட்டர் தூரத்தில் மாபெரும் கிறிஸ்துமஸ் பேரணி நடைபெற்றது. இதில் 500 பேர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, பாதசாரிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து நடந்து சென்றது சிறப்பான காட்சியாக அமைந்தது.

சென்னை புறநகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திருச்சபைகள் ஒன்றிணைந்து இப்பேரணியை முன்னெடுத்தன. பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், சிறுவர் சிறுமிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, உலக சமாதானம், போதை இல்லாத மாநிலம், விபத்து இல்லாத தமிழகம் உருவாக வேண்டி பிரார்த்தனை செய்தனர்.


இந்நிகழ்ச்சியை புதுவாழ்வு ஜெம்ஸ் பேராலயத்தின் தலைமைப் போதகர் பாஸ்டர் ஐசக் டேனியல் ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அன்பு, அமைதி, சகிப்புத்தன்மையின் அடையாளம். அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு இந்த பேரணி நடத்தப்பட்டது,”
என்று தெரிவித்தார்.
மேலும், உலக மக்கள் அனைவரும் அமைதியுடன் வாழ வேண்டி பிரார்த்தனை செய்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.




