• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு, மதுரையில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி…

ByKalamegam Viswanathan

Nov 14, 2023

பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகளின் கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயால் வரும் பார்வை இழப்பை தடுக்க சர்க்ரை நோயாளிகள் அனைவரும் தங்கள் கண்களை 6 மாதத்திற்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரிடமும் விதைக்க என்ற நல்ல எண்ணத்துடன் வாஸன் கண் மருத்துவமனை மாபெரும் விழிப்புணர்வுப் பேரணியை மதுரை காளவாசலில் இன்று நிகழ்த்தியது.

இந்தப் பேரணிக்கு வாஸன் கண் மருத்துவமனையின் தமிழ்நாடு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.K.கமல்பாபு முன்னிலை வகித்தார் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் குமார் IPS தலைமை வகித்து சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்ததான விழிப்புணர்வு உரையாற்றி பேரணியை துவக்கி வைத்தார்.

இந்த பேரணி காளவாசல் பழங்காநத்தம், சொக்கலிங்கம் நகர் வழியாக மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றது.

பேரணியில் அண்ணா அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் அன்னை பாத்திமா கல்லூரியின் மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்‌ கலந்து கொண்டனர்.

14ம் தேதி (இன்று) முதல் 30ம் தேதி வரை அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச விழித்திரை பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் முனைவர். சு. கிருஷ்ணன், அண்ணா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் . அண்ணாதுரை, மதுரை HMSன் மாநில துணைத்தலைவர் திரு. பாதர் வெள்ளை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மதுரை மண்டலத் தலைவர் .A.முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்ச்சியில் காளவாசல் கிளையின் மேலாளர் திரு. முத்துக்குமரவேல் வரவேற்புரையாற்றினார். வாஸன் கண் மருத்துவமனையின பொதுமேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.