• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பலா மரங்களை சேதப்படுத்தி பழங்களை ருசி பார்த்த யானை கூட்டம் !!

BySeenu

Mar 15, 2025

கோவை, மாவட்டம் தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில், வசந்தி என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள பலா மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. வானம் பார்த்த பூமியானதால், தற்போது பயிர்கள் எதுவும் பயிரிடப்படாத நிலையில், அங்கு பலா மரங்களும், முருங்கை மரங்களும் மட்டுமே உள்ளன.
இந்நிலையில், உணவு தேடி வந்த யானைகள், பலா மரங்களின் கிளைகளை உடைத்து, அங்கு இருந்த பலாப் பழங்களை தின்றும், சேதப்படுத்தியும் சென்று உள்ளன.

இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வருவதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. யானைகளின் தொடர் வருகையால், இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை பாதுகாப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பகுதி விவசாயிகளும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.