• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ப்ரீ கேஜி படிக்கும் சிறுமியின் பேக்கில் துப்பாக்கி..!

Byவிஷா

Aug 17, 2023

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமியின் பேக்கில், துப்பாக்கி இருந்ததைக் கண்டு பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சன் ஆண்டோனியோ நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ப்ரீ கேஜி படிக்கும் மூன்று வயது சிறுமியின் பேக்கில் கை துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வகுப்பாசிரியைக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சிறுமியின் தந்தை பீட் ராபில்சை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவரது மகள் தகுந்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமியின் பள்ளியில் குழந்தைகள் பேக் கொண்டு வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு தேவையான சாதனங்களை குழந்தைகள் கண்ணாடி கவர் அல்லது உள்ளே இருப்பதை வெளியில் காட்டும் ஜிப் கவர் போன்றவற்றில் வைத்து கொண்டு வரலாம். பெற்றோருக்கு தெரியாமல் கூட குழந்தைகள் ஆபத்தான பொருட்களை பள்ளிக்கு கொண்டு வரும் அபாயம் இருப்பதால் இத்தகைய தடை விதித்து இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.