• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராணி எலிசபெத் சவப்பெட்டி அருகில் மயங்கி விழுந்த காவலர்

Byகாயத்ரி

Sep 16, 2022

தேசிய கொடியால் மூடப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி 900 ஆண்டுகள் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அவரது இறுதிச் சடங்கிற்கு முன் நான்கு நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 கி.மீ. தொலைவுக்கு லண்டனில் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று,ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், வியாழன் அன்று ராணியின் சவப்பெட்டிக்கு அருகில் கண்காணிக்கும் பணியில் நின்றிருந்த காவலர்களில் ஒருவர் மயக்கமடைந்து கீழே விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.