பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், செயல்பாடுகள், சேவைகள் மற்றும் சாதனைகள் குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய பத்மநாபன் தலைமையில் மாபெரும் புகைப்படக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து சட்டப்பணிகள் என்றால் என்ன, இதன் செயல்பாடுகள், மற்றும் சாதனைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
இந்த கண்காட்சியில் பாலியல் தொல்லைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்,
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கட்டணமில்லா எண் 15100 விளம்பரப்படுத்தல், கொத்தடிமை தொழிலாளர்கள் சம்பந்தமாக ஆய்வு செய்தல், குடும்ப நல சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, பட்டியல் வழக்கறிஞர்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் இந்த கண்காட்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், பணியாளர்கள், மற்றும் பள்ளி மாணவி மாணவிகள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)