கிறிஸ்துமஸ் குடில் திருவிழா கொண்டாட்டத்தில் நானும் மதுரைக்காரன் தான் டா – எனக்கு மதுரை இட்லியும் சங்க இலக்கிய நூல்களும் மிகவும் பிடிக்கும் என அழகு தமிழில் பேசி அசத்திய அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து வந்து மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் துறையில் பயிலும் மாணவர் மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் உள்ள தனியார் விடுதியில் அமிக்கா( amikka) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிமஸ் குடில் பிரமாண்ட கேக்கில் தயாரிக்கப்பட்டது.

கடந்த 40 நாட்களுக்கு முன் ஒயின் மற்றும் உலர் திராட்சைகள் உள்ளிட்டவைகளை வைத்து கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் குடில் போன்று முழுக்க 100kg எடையுள்ள ஜிஞ்சர் கேக்குகளாலே தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட குடில் அதற்குள்ளே பிளம் கேக் உள்ளிட்டவைகள் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்கு பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது
முன்னதாக அமிக்கா ஊழியர்கள் சமையற்கலை நிபுணர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் ஒன்று கூடி கிறிஸ்மஸ் பாடல்களை ரசித்த நிலையில் அவர்களுக்கு இயேசு பிறப்பு குறித்த நற்செய்தி கிறிஸ்துவ மத போதகர் ஜெபராஜா மூலம் உலகில் அமைதி நிலவும் சமத்துவம் சகோதரத்துவம் பரவி ஒற்றுமையாக வாழ மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது .

அதன் பிறகு பட்டாசு வெடிக்க அங்கே வைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட எல்இடி கிறிஸ்மஸ் மின்சார விளக்கு ஏற்றப்பட்டது
தொடர்ந்து கிறிஸ்மஸ் பாடல்களை இசையமைக்க பிரபல மதுரை ஸ்கொயர்ஸ் குழுவினர்கள் தமிழ் பாடலை பாடினர். இக்குழுவில் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் இருந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பயலே வந்த மாணவர் ஜோவும் இசைக்குழுவில் அழகாக தமிழில் பாடி அனைவரையும் அசத்தினார்
முன்னதாக கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த இளைஞர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியதோடு மட்டுமல்லாது ஆடி பாடி அங்கிருந்தவர்களோடு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனிடையே அந்த இசைக்குழுவில் பாடுவதற்காக வருகை தந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயிலக்கூடிய அமெரிக்காவைச் சேர்ந்த மாணவரை பார்த்து செய்தியாளர் வெளிநாட்டினர் என்பதால் ஆங்கிலத்தில் உரையாட
அவரோ தமிழில் பேசலாம் அண்ணே என்று மதுரை சாயலில் பேசியது வியப்பை அதிகரிக்கச் செய்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜோ என்ற கல்லூரி மாணவரும் நடத்திய நேர்காணலின்போது,

பிறந்தது அமெரிக்காவின் சிகாகோவாக இருந்தாலும் தமிழும் மதுரை மக்களுடைய பழக்கவழக்கமும் தமிழ் நூல்களும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. ஆனாலும் இங்கு இவர்களோடு இணைந்து இவ்வாறு கொண்டாடி மகிழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
சங்க இலக்கிய நூல்கள் மிகவும் பிடிக்கும் குறிப்பாக மதுரை உணவு இட்லி வடை தோசை பபனியாரம் , மீன் குழம்பு .இடியாப்பம் எனக்கு மிகவும் பிடிக்கும் என அழகு தமிழில் பேசியது குறிப்பிடத்தக்கது.




