மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மதுரை நகைச்சுவை மன்றம் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. டாக்டர் சேதுராமன் தலைமை வகித்தார்.டாக்டர் குருசங்கர் முன்னிலை வகித்தார்.

அமைப்புச் செயலாளர் பாண்டியராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ஞானசம்பந்தன் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் வளரும் கலைஞர் விருது மாணவி தெ. வெண்பாவிற்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் நன்றி கூறினார்.