• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பள்ளி குழந்தைகளுக்கு பயன்பாட்டு பொருட்கள் வழங்கும் விழா

ByKalamegam Viswanathan

Feb 20, 2025

மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு 18 லட்சம் ரூபாய் அளவில் பயன்பாட்டு பொருட்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று மதுரை மேயர் இந்ராணி பொன்வசந்த் பயன்பாட்டு பொருட்கள் வழங்கினார்.

ரோட்டரி உலகளாவிய அமைப்பு மற்றும் மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு பயன்பாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி பங்கேற்றனர்.

போலியோ நோய் ஒழிப்பை முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் முன்னெடுத்து வெற்றி கண்டுள்ள உலகளாவிய ரோட்டரி எனும் பொதுச் சேவை அமைப்பின் ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் மதுரை 30 சங்கங்கள் இணைந்து மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி பயிலும் 600 ஏழை எளிய மாணவச் செல்வங்களின் கற்றல் பணிக்கு உதவிடும் வகையில் ரூபாய் 18 லட்சம மதிப்பீட்டில் 15 பொருட்கள் அடங்கிய பைகள் மதுரை மாநகராட்சி மேயர் இந்ராணி பொன் வசந்த் தலைமையில் இன்று மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் ஷர்மா, கவுன்சிலர் வசந்தா தேவி, கல்வி குழு தலைவர் ரவீந்திரன்ர், மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மதுரையில் உள்ள 30 ரோட்டரி சங்கங்களின் தலைவர் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றார்.

இந்தப் பயன்பாட்டு பொருட்கள் அடங்கிய பைகளை ஸ்கா எனும் கனடா நாட்டுப் பொதுச் சேவை அமைப்பு நன்கொடையாக ரோட்டரி சங்கங்கள் மூலம் சென்னை, பாண்டிச்சேரி, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய மாநகரங்களில் மொத்தம் 5000 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த மதிப்பு ரூபாய் ஒன்றரை கோடி ஆகும். சென்னை அம்பத்தூர் ரோட்டரி சங்கம் உதவியுடன், திருச்சிராப்பள்ளி மிட்டவுன் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சி மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ரோட்டரி மாவட்ட எழுத்தறிவு பிரிவுச் செயலாளர் சிதம்பரம், இணைச் செயலாளர் கவுசல்யா முருகேசன், ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

சென்னை அம்பத்தூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ரவிசங்கர் அணியினரின் உதவியுடன், திருச்சிராப்பள்ளி மிட்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கோகுல் அணியினர் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
கீழ்க்காணும் பொருட்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்றன
SCAW கிட் உள்ளடக்க பட்டியல்

  1. ஜமுக்காளம்
  2. படுக்கை விரிப்பு
  3. தலையணை
  4. தலையணை உறை
  5. பள்ளிப் பை
  6. நோட்டுப் புத்தகங்கள்
  7. துண்டு
  8. இரவு உடை
  9. சீருடை
  10. கொசு வலை
  11. தண்ணீர் பாட்டில்
  12. படுக்கை விரிப்பு
  13. கம்பளி போர்வை
  14. தொப்பி