• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அநீதிக்கு எதிராகப் போராடும் “நாய்” பிரதான பாத்திரத்தில் நாய் நடிக்கும் திரைப்படம்!

Byஜெ.துரை

Mar 13, 2024

விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி.

இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்து சினிமா மீதுள்ள தீராக்காதலால் மருத்துவப் பணியை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பல குறும்படங்களை இயக்கி இப்பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகி சக்கைக்போடு போடும் ‘மஞ்சும்மல் பாய்ஸ் ‘போல இப்படமும் கொடைக்கானல் பின்னணியில் எடுக்கப்படுகிறது.

இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடிக்கிறது.

இத் திரைப்படத்தில் எஸ்.ஏ சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய்.ஜி மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன்,அயலி மதன், இந்திரஜா ரோபோ சங்கர், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி உட்பட மற்றும் பலர் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்

இப்படத்தின் ஒளிப்பதிவை தலைக்கூத்தல் படத்தின் ஒளிப்பதிவாளரான மார்டின் டான்ராஜும், படத்தொகுப்பை பல தேசிய விருதுகளை வென்ற பி.லெனின் அவர்களும், கலையை அ.வனராஜும் மேற்கொண்டுள்ளனர்.

பெயரிடப்படாத இப்படத்தை “கனா புரொடக்சன்ஸ்”மூலம் தயாரிக்கிறார் டிராஃபிக் ராமசாமி படத்தின் இயக்குநர் விக்கி.

“மனிதர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுவது என்பது இயல்பு.

ஒரு நாய் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுவதே இக்கதையின் சிறப்பம்சம்” என்கிறார் இப்படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி.