• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் தற்கொலை..!

Byவிஷா

Oct 13, 2023

கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தன்னைத்தானே தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தனது வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி – பெங்களூர் சாலையில் வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வந்த நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டார். கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்கங்களின் நகர தலைவராகவும் இருந்தவர் தொழிலதிபர் எம்.பி சுரேஷ். கடந்த சில நாட்களாக தொழிலதிபர் எம்.பி சுரேஷ் மன வருத்தத்தில் இருந்ததாகவும், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடுகள் பெரிய அளவில் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் இன்று காலை கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சென்ற கிருஷ்ணகிரி நகர போலீசார், அவரது வீட்டில் இருந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவே முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.