• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு

ByKalamegam Viswanathan

Dec 30, 2024

திருப்பரங்குன்றத்தில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு. மது போதையில் இருந்த குரங்கின் செயல்களால் தண்ணீர் ஊற்றி விரட்டி அடித்த பொதுமக்கள், குரங்கின் சூழ்நிலை கருதி பாதுகாத்த சமூக ஆர்வலர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் மது போதையில் இங்கும் அங்கும் சுற்றி திரிந்த குரங்கு மது போதையில் இருந்த குரங்கின் செயல்களால் கடுப்பான பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி விரட்டி அடித்துள்ளனர். அதனைக் கண்டு இறக்கப்பட்ட பெண் ஒருவர் சமூக அலுவலருக்கு தகவல் சொல்லவே குரங்கு பத்திரமாக மீட்கப்பட்டது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மதுரையின் முக்கியமான சுற்றுலாத்தலமாகும் முருகனை தரிசிப்பதற்காக தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்வது வழக்கம். மிகவும் மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த பகுதியில் உள்ள சன்னதி தெருவில் குரங்கு ஒன்று மதுபோதையில் இங்கு மங்கும் சுற்று திரிந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கடுப்பாகி அதன் மீது தண்ணீர் ஊற்றியும் அதனை விரட்டி அடித்தும் உள்ளனர். இந்த நிலையில் அதே தெருவில் உள்ள ராதிகா என்பவர் வீட்டு மாடியில் மது போதை அதிகமானதால் நகர முடியாமல் இருந்துள்ளது அந்த குரங்கு அதனை கண்ட ராதிகா இரக்கப்பட்டு உடனே இணையத்தின் மூலம் திருநகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் பாம்பு பிடி வீரரும் ஸ்நேக் பாபுவை ‌தொடர்பு கொண்டு உள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த சினேக் பாபு மதுபோதையில் இருந்த அந்த குட்டி குரங்கை மீட்டு டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி அதற்கு மருந்து அளித்து அதனை பாதுகாத்து வருகிறார் குரங்கின் போதை தெளிவதற்கும் அது மீண்டும் இயல்பு நிலைக்கு மாறுவதற்கும் நான்கு மணி நேரத்திற்கு மேலாகும் என டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் தற்போது சமூக ஆர்வலர் வீட்டில் அந்த குரங்கினை வைத்து பாதுகாத்து வருகிறார்.

கீழே போடப்பட்ட மது பாட்டிலில் இருந்து தானே மதுவை எடுத்து குரங்கு குடித்ததா அல்லது சமூக விரோதிகள் யாரேனும் குரங்குக்கு மதுபானத்தை ஊற்றி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஐந்தறிவு உள்ள குரங்கிற்கு ஏற்பட்ட இந்த நிலையும் ஆறறிவு பெற்ற மனிதனின் இந்த செயலும் மனிதாபிமானம் அற்றது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை.