• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வடிவேல் பாடலுக்கு சாலையில் நடமாடிய போதை ஆசாமி..!

ByKalamegam Viswanathan

Oct 23, 2023

மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன்ஹால் ரோடு, வணிக வளாகங்கள் நிறைந்து காணப்படும் இடமாக திகழ்கிறது. குறிப்பாக உலகப்புகழ்பெற்ற ஆன்மீக தளமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை என்பதால் ரயில் நிலையங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அவ் வழியே கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டவுன்ஹால் பகுதியில் உள்ள ஆட்டோ நிலையத்தில் ஒலி பெருக்கியில் பாடல்கள் இசைக்கப்பட்டது. அதற்கு அங்கிருந்த போதை ஆசாமி ஒருவர் மற்றும் ஓர் இளைஞன் அவ்வழியே செல்லும் வெளிமாநில சுற்றுலா பயணிகள், பெண்கள் மற்றும் குடும்பத்தினரின் முகம் சுழிக்கும் விதத்தில் தரக்குறைவாக ‘வடிவேல்’ பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் தற்போது சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.