• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிணற்றில் தவறி விழுந்த நாய்..,

ByR.Arunprasanth

May 24, 2025

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். விவசாய பாசனத்திற்காக கிணறு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

விவசாய நிலத்தில் குட்டி போட்டு வாழ்ந்து வந்த ரோஸி என்கின்ற நாய் இன்று திடீரென எதிர்பாராத விதமாக கிணற்றிற்குள் விழுந்து உயிருக்கு போராடியது.

இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி காப்பாற்றுவதற்கு பலமுறை முயற்சி செய்தும் நாயை கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வர முடியாததால் தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்
கிணற்றின் மேல் பகுதியில் இருந்து சுருக்கு கயிறு கட்டி நாயை மீட்க முயற்சி செய்தனர் அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் ரோசியை நாய் கிணற்று தண்ணீரில் விழுந்தது உடனடியாக தீயணைப்பு படையினர் சுமார் 50,அடி கிணற்றிற்குள் இறங்கி இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருக்கு போராடிய நாயை சுருக்கு கயிறு கட்டி கிணற்றின் மேல் பகுதிக்கு தூக்கி காப்பாற்றினர்.

வாயில்லா ஜீவனை போராடி மீட்ட தாம்பரம் தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சுற்றிலும் குடியிருப்பு நிறைந்த பகுதியில் சுற்று சுவர் இல்லாத கிணற்றை வேலிக்கட்டி பாதுகாக்கும் படி கிருஷ்ணமூர்த்திக்கு தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தி சென்றனர்.