மதுரையிலும் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் பயன்படுத்தும் வகையில் 1 கோடி மதிப்பில் 20 தாழ்தள பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த பேருந்துகளில் தவழும் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் ஏறி பயணிக்கும் வகையில், சாய்வு பலகை வசதி, படியின் உயரத்தை குறைக்கும் வசதி, பேருந்துக்குள் வீல் சேர் நகராமல் இருப்பதற்கான சிறப்பம்சங்கள் இருப்பதோடு, தவழும் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்காக 12 இருக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகள் மதுரை பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கும், திருமங்கலம், ஊமச்சிகுளம், அழகர்கோவில், மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை ஆகிய வழித்தடங்களிலும் இயக்கப்பட்டுவருகின்றன.
இந்த பேருந்துகள் சேவை தொடக்கி வைத்த போது தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் பயன்படும் வகையில் பேருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு ஆண்டுகள் ஆன நிலையிலும் தவழும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களது வீல் சேர்களுடன் பயணிக்கும் படிக்கட்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மாற்றுத்திறனாளிகளும் முதியவர்களும் பயணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது
இந்நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியின் பயிற்சியாளரான தவழும் மாற்றுத்திறனாளி செல்வம் என்பவர் நேற்று பயிற்சிக்காக சென்றுவிட்டு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள சூர்யா நகர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார்.
அப்போது அழகர்கோவில் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற 3 தாழ்தள பேருந்துகளை நிறுத்தியபோதும் 2 பேருந்துகளும் நிற்காமல் சென்றுள்ளது.
3 ஆவதாக வந்து பேருந்து நிறுத்தியபோது அதில் தவழும் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட படிக்கட்டுகளை எடுக்க முயன்றபோது அதை பயன்படுத்த முடியவில்லை, அப்போது செல்வத்துடன் வந்த நபர் படிக்கட்டுகளை பயன்படுத்த முயன்றபோது நடத்துனருக்கு அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றே தெரியவில்லை , அதே நேரத்தில் அடுத்த பஸ்ல வாங்க என கூறி ஓட்டுனரும் அவசரகாட்டியுள்ளார்.
பின்னர் பேருந்தில் மாற்றுத்திறனாளியை ஏற்றாமலே சென்றுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த செல்வம் மாற்றுத்திறனாளி களுக்காக சத்தியமாக அமைக்கப்பட்டு இயக்கப்படுவதாக கூறப்பட்ட பேருந்துகளில் படிக்கட்டுகள் பயன்படுத்தபடவில்லை எனவும் அதனை பயன்படுத்துவதற்கு நடத்துனர்களுக்கு கூட தெரியவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து நான்காவதாக வந்த பேருந்தை மாற்றுத்திறனாளி செல்வம் நிறுத்தியபோது படிக்கட்டுகள் வேலை செய்யாத நிலையில் நடத்துனர் கீழே இறங்கி சென்று அருகில் உள்ள கடை ஒன்றில் இரும்பு கம்பியை வாங்கி வந்து படிக்கட்டை சரி செய்து மாற்றுத்திறனாளி செல்வத்தை பேருந்தில் ஏற்றி புறப்பட்டு சென்றார் அதற்கு மாற்றுத்திறனாளி செல்வம் நடத்துனருக்கு நன்றி தெரிவித்தார்
மாற்றுத்திறனாளிகளுக்காக இயக்கப்படக்கூடிய சிறப்பு பேருந்துகளில் கடந்த மார்ச் மாதத்திற்கு பின்பாக எந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தவில்லை எனவும் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட பேருந்துகளில் அதற்கான படிக்கட்டுகளை அவ்வப்போது பயன்படுத்தும் வகையிலும் அமைத்தால் தான் மாற்றுத்திறனாளிகளும் முதியவர்களும் பயன்படுத்தும் நிலை உருவாகும்
எனவே போக்குவரத்து துறை இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கக்கூடிய தவழும் மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிறுத்தினால் அவர்களை பேருந்தில் அழைத்துச் செல்வதற்கான அறிவுறுத்தல்களை ஓட்டுநர்களுக்கும் நடத்துனர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் இது போன்ற திட்டங்களை பெயரளவிற்கு அறிவித்துவிட்டு பயன்பாடு இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் அவதி அடைந்து வருவதாகவும் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)