• Wed. May 20th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

கோவை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு !!!

BySeenu

May 20, 2026

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் நேற்று இரவு நிறுத்தப்பட்டு இருந்த வாடகை கார் ஒன்று திடீரென ‘மளமளவென’ தீப்பற்றி எரிந்த சம்பவம், விமான நிலைய வளாகத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

​கோவை, அவினாசி சாலையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதனால் இந்த வளாகம் எப்போதும் மிக பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும்.

இந்நிலையில், நேற்று இரவு விமான நிலையத்தின் நுழைவாயில் (Entrance) பகுதிக்கு அருகே பயணிகள் ஏற்றுச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை கார் (Call Taxi) ஒன்று ​திடீரென தீ பற்றி எரிந்தது

கார் நிறுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதன் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி, தீப்பற்றி எரியத் தொடங்கியது.

கார் தீ பற்றி எரிந்ததை கண்ட விமான நிலையப் மற்ற வாடகை கார் ஓட்டுநர்கள்
​இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீ அணைப்பானை பயன்படுத்தி கொண்டு இருந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழிற்படை (CISF) போலீசார், விமான நிலைய அவசரக் கால தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சடித்து காரில் பற்றி எரிந்த தீயை மேலும் பரவவிடாமல் கட்டுப்படுத்தி முழுமையாக அணைத்தனர்.

ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் நூலிழையில் தவிர்க்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், காரில் ஏற்பட்ட மின் கசிவு (Short Circuit) காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தத் திடீர் தீ விபத்து காரணமாகக் கோவை விமான நிலைய வளாகத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் நேற்று இரவு பரபரப்பான சூழல் நிலவியது.