• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வயலுக்குச் சென்ற விவசாயி மீது கார் மோதி, விவசாயி உயிரிழப்பு… பதறவைக்கும் cctv காட்சி..,

ByG.Suresh

Dec 2, 2023

சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் அழகுபாண்டி (49). இவர் ஒக்கூர் இந்திரா நகர் பகுதியில் வயலுக்குச் செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். அப்போது சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் வேகமாக வந்த கார் ஓக்கூர் மெயின் ரோடு வந்த போது, அவரது இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் விவசாயி அழகுபாண்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.


காரை ஓட்டி வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தீபக் (25). மதகுபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். மதகுபட்டி காவல் துறையினர் விவசாயி அழகுபாண்டியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மோதி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.