மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாப்பனோடை கிராமத்தில் குளிக்க சென்ற சிறுவன் பாறையில் முட்டி தலையில் காயம் ஏற்பட்டு இறந்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பாப்பனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் அரசகுமார். இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது 13), இவரது தம்பி பீஷ்மர் (வயது 11) ,மற்றும் இவர்களது நண்பர் ஆகாஷ் வயது 13 மூன்று பேரும் வீட்டின் அருகில் உள்ள பாறை கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது டைவ் அடித்து குதித்த விக்னேஷ் பாறையில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து பீஷ்மர் மற்றும் ஆகாஷ் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 60 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி மீட்பு பணிகளில் ஈடுபடுவது சற்று சிரமமாக இருந்தது.

மேலும் மேலக்கால் பகுதியைச் சேர்ந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நள்ளிரவு இரண்டு மணி அளவில் சிறுவன் விக்னேஸ்வரன் மீக்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விக்னேஸ்வரன் மதுரையிலுள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவன் குளிக்கும் போது, கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
