• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

இறப்பிலும் பிரியாத பந்தம் !!!

BySeenu

Jul 16, 2025

கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அவரது உடல் அருகே மனைவியும் உயிர்விட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன்(92)
பத்திரபதிவு எழுத்தராக இருந்துள்ளார். இவரது மனைவி சரோஜா (82). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அதில் ஒரு மகள் குடும்பத்துடன் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வண்ணான் கோவில் பிரிவில் வசித்து வருகிறார். ராகிருஷ்ணன் – சரோஜா இருவரும் அவர்கள் வீட்டில் மகளுடன் இருந்து உள்ளனர்.

வயது மூப்பின் காரணமாக ராதாகிருஷ்ணன் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப் பட்ட நிலையில் உயிர் இழந்தார். குடும்பத்தினர் சோகமாக இருந்த நிலையில், கணவணின் உடல் அருகே அழுதபடி உட்கார்ந்திருந்த சரோஜா துக்கம் தாங்காமல் திடீரென மயங்கி  கணவரின் உடல் அருகே சாய்ந்து உள்ளார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தனர். இதை தொடர்ந்து மின்மயானத்தில் இருவர் உடலும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது.

ராதாகிருஷ்ணன் சரோஜா தம்பதிகள் எப்போதும் எங்கு சென்றாலும் ஒன்றாகத் தான் செல்வதை வழக்கமாக வைத்து இருந்தனர். இருவரும் பிரியாமல் ஒன்றாகவே இருந்தவர்கள், இறப்பிலும் பிரியாமல் உயிர்விட்ட சம்பவம் குடும்பம் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.