நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் மாலை நேரத்தில் தேயிலை தோட்டங்கள் வழியாக கருஞ்சிறுத்தை நடந்து சென்றதை கண்டு மக்கள் அச்சமடைந்தனர்
கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சிறுத்தை கருஞ்சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது
இரவு நேரங்களில் மட்டுமே அதிகமாக சிறுத்தைகள் நடமாடி வரும் நிலையில் நேற்று மாலை பெத்தளா என்ற கிராமத்தில் மாலை கருஞ்சிறுத்தை உலா வந்தது
இதனைக் கண்ட கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர் தேயிலை தோட்டங்கள் வழியாக மெதுவாக நடந்துச்சென்ற கருஞ்சிறுத்தை வன பகுதிக்குள் சென்றது
கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் தேயிலை தோட்டபணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சுமடைந்துள்ளனர்