• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாஜக கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும்.

ByKalamegam Viswanathan

Jun 8, 2025

ஆப்ரேஷன் சிந்தூர், நமது வான் வழி தாக்குதல்களின் வலிமையை உலகிற்கு உணர்த்தியது.

இன்னும் ஆப்ரேஷன் சித்தூர் முடியவில்லை. தீவிரவாதிகள் இன்னும் தொடர்ந்து வாலாட்டினால், தக்க பதிலடி அவர்கள் வீடு புகுந்து கொடுக்கப்படும்.

2026ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமானது. 2024ம் ஆண்டில் ஒரிஸாவில் முழு மெஜாரிட்டியோடு பாஜக ஆட்சி அமைத்தது. அதே போல் ஹர்யானாவில் மூன்றாவது முறை ஆட்சி அமைத்தது. மகாராஷ்டிராவிலும் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெற்றது.

2025 ல் டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தது. அதே போல் 2026 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரப் போகிறது. 2026 ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும்.

இங்கு தற்போது திமுக ஊழலில் திளைத்துக் கொண்டு இருக்கிறது.மோடி அரசு ஏழை மக்களுக்காக கொடுக்கும் பணத்தை மடை மாற்றி திமுக அரசு கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறது.

திமுக ஆட்சியில் ஏழைகள் மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

39,775 கோடி ரூபாய் டாஸ்மாக்கில் ஊழல் நடந்து இருக்கிறது. திமுக அரசு 100 க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு. திமுக தனது வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை நிறைவேற்ற வில்லை.

ஸ்டாலின், தைரியம் இருந்தால் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலை எடுத்து வாருங்கள். கள்ளச் சாராயத்தினாலும் தமிழகத்தில் ஏழை மக்கள் இந்த ஆட்சியில் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

தென் தமிழகத்தில் சாதி அரசியல் தலைத் தூக்கி இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. அது குறித்து தமிழக முதல்வர்க்கு அக்கறை இல்லை.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருப்பரங்குன்றத்தை, சிக்கந்தர் மலை எனச் சொல்ல திமுகவிற்கு தைரியம் வந்து இருக்கிறது.

ஜூன் 22 முருகப் பக்தர்கள் மாநாட்டில் மதுரைக்கு வந்து நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும். தமிழ் என பேசிக் கொண்டு இருக்கும் நீங்கள் இஞ்சினியரிங் போன்ற உயர்கல்வி பாடத்திட்டத்தையும் தமிழில் இயற்ற வேண்டியதானே தமிழக அரசைக் கேட்கிறேன்.

தமிழகத்தின் செங்கோலை பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்ற பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் நன்றி சொன்னாரா?