பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி பார்வையாளர்கள் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பொங்கல் பண்டிகையை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளன்று (நேற்று) மதுரை அவனியாபுரத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று (ஜன.15 ) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியைப் பத்திரப் பதிவு மற்றும் வணிகத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
இதில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களும் பாலமேடு வருகை தந்துள்ளனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில், பார்வையாளர் மேடையில் டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ SAVE அரிட்டாப்பட்டி’. ‘TUNGSTINE MINING’ என்ற பதாகைகளை ஏந்தி பார்வையாளர்கள் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது