திருப்புவணம் அருகேவுள்ள காஞ்சிரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான முதியவர் கருப்பையா. இவருக்கும் அருகில் குடியிருந்து வரும் முருகன் என்பவரது குடுபத்திற்கும் ஏற்கனவே தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முதியவர் கருப்பையா முருகன் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படும் நிலையில், இதில் ஆத்திரமடைந்த முருகனின் 18 வயது மகனான சக்திகனேஷ் ஆத்திரத்தில் முதியவரை அரிவாளால் சராமாரியாக வெட்டியதுடன் கல்லால் தாக்கியும் கொலை செய்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் திருப்புவணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே உடனடியாக சம்பவ இடம் வந்த காவல்துறையினர் தப்பியோடிய சக்தி கணேஷை துரத்தி சென்று அருகில் உள்ள கண்மாய் கரையோரம் மடக்கி பிடித்ததுடன் இறந்த கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருப்புவணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சக்தி கணேஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.