பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது மதுரை மாவட்டத்தில் மட்டும் 3000 -க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் தேர்வு எழுதப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் பகுதியில் சேர்ந்தவர் கண்ணன் இவரது மகள் துர்கா தேவி வயது 17 மதுரை தெப்பகுளம் பகுதியில் உள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .
இந்த நிலையில் ஆவியூரில் இருந்து மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி துர்கா தேவி(வயது 17) இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்காக ஆவியூரிலிருந்து மதுரைக்கு அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அல்லிக்குளம் பகுதியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் இருசக்கரத்தில் வந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பெருங்குடி போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு சென்றனர் மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+2 தேர்வு எழுத சென்ற மாணவி துர்கா தேவி அரசு பஸ் மோதி பலியான சம்பவம் வலையங்குளம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.







