• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி சார்பாக நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

தேனி மாவட்டம் கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி சார்பாக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சிற்றூர் சீரமைப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக ஆண்டிபட்டி ஸ்டார் அறக்கட்டளை மற்றும் தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் தலைவர் ஸ்டார்.சா.நாகராசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் குருதிக்கொடை , விழிக்கொடை , உடல் உறுப்புகள் கொடை , மனிதன் இறந்த பின் மனிதர் தோல் கொடை பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார்.

.நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி அரசு கால்நடை மருத்துவர் பாலாசுப்பிரமணி வெறி நாய் கடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் மரக்கன்று நடப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டிபட்டி ஸ்டார் அறக்கட்டளையின் சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டது.