• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இப்போ வரை சாகாமல் தான் இருக்கிறேன்.. நடிகை சமந்தா

ByA.Tamilselvan

Nov 8, 2022

எனது உடல் நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளதாக சில செய்திகளைப் பார்த்தேன். ஆனால், நான் அப்படியான நிலையில் இல்லை. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல் தான் இருக்கிறேன் என்று, நடிகை சமந்தா மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.
நடிகை சமந்தா தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் விரைவில் முழுவதும் குணமடைவேன் என்றும் கூறியிருந்தார்.
சமந்தா நடித்துள்ள ‘யசோதா’ திரைப்படம் தமிழ், தெலுங்கில் வருகின்ற 11-ம் தேதி வெளியாக உள்ளது. வெளியில் சென்று இப்படத்திற்காக புரமோஷன் செய்ய முடியாது என்பதால் தமிழ், தெலுங்கில் படத் தயாரிப்பு நிறுவனமே சமந்தாவின் பேட்டி ஒன்றை எடுத்து அதை யூ-டியூபில் வெளியிட்டுள்ளது. தெலுங்கு பேட்டியில் தன்னுடைய உடல்நிலை குறித்து கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார் சமந்தா. அதில், “இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில தினங்கள் நல்ல நாட்களாகவும், சில தினங்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. சில நாட்களில் ஒரு அடி நடப்பது கூட எனக்கு சிரமமாக இருந்தது.
ஆனால், திரும்பிப் பார்க்கும் போது நான் பல விஷயங்களைக் கடந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என ஆச்சரியமாக நினைப்பேன். நான் இங்கு போராடவே இருக்கிறேன். நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். எனது உடல் நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளதாக சில செய்திகளைப் பார்த்தேன். ஆனால், நான் அப்படியான நிலையில் இல்லை. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல்தான் இருக்கிறேன். அந்தத் தலைப்புச் செய்திகள் அவசியமானவை என நான் நினைக்கவில்லை. மிகவும் கஷ்டமான நிலையில்தான் இருக்கிறேன், ஆனால், அதை எதிர்த்துப் போராடுவேன்” என மிகவும் எமோஷனலாக கண்ணீருடன் பேசியுள்ளார்.