• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வேலூரில் அக்னிபத் திட்டத்தின்
கீழ் ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15 முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
ராணுவத்தில் கீழ்காணும் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் நவம்பர் 15 முதல் 29 வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.
I. அக்னி வீரர் (ஆண்).
II. அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்).
III. சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர்/ கால்நடை செவிலியர் உதவியாளர்.
iv.  இளநிலை சேவை அதிகாரி
தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கெனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட முகாம் பற்றிய அறிவிக்கையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
ஆவணங்களை எடுத்து வருவதற்கான அமைப்பு முறையும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் அவற்றை தவறான முறையில் (குறிப்பாக உறுதிமொழி பத்திரம்)  எடுத்து வரும் விண்ணப்பதாரர் முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.