• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சரி செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம்!
ஹேப்பியாகி ரீல்ஸ் போடும் யூசர்ஸ்

நேற்று உலகின் பல பகுதிகளிலும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் திடீரென முடங்கிய நிலையில் பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலக அளவில் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. நடிகர்கள் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை பில்லியன் கணக்கானோர் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்திருக்கின்றனர்.
பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக துவக்கப்பட்டாலும் பின்னர் அதன் தாய் நிறுவனமான மெட்டா இன்ஸ்டாகிராம் வலைதளத்தை வாங்கியது. வாட்ஸ் அப்பும் மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் பயனாளர்களின் எண்ணிக்கை மேலும் பல மில்லியன்கள் அதிகரித்துள்ளது. டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு தங்கள் திறமைகளை வெளிக்காட்ட பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் நேற்று இரவு திடீரென உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்ஸ்டாகிராம் முடங்கியது.
பலரது அக்கவுண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக செய்தியும் வந்தது. இதனால் குழம்பிப்போன பயனாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்சப் முடங்கிய நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமும் முடங்கியதற்கான காரணம் புரியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக பலரது அக்கவுண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளதாகவும் இந்த பிரச்சினையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் இன்ஸ்டாகிராம் மின் பொறியாளர்கள் குறிப்பிட்ட அந்த ‘பக்’கை சரி செய்தனர்.
இதை அடுத்து இன்ஸ்டாகிராம் மீண்டும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கணக்குகளும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.