• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குஜராத் தொங்குபாலம் விபத்து- 142 பேர் பலி

ByA.Tamilselvan

Oct 31, 2022

குஜராத் தொங்கு பால விபத்தில் பலி எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் நேற்று சாத் பூஜை விழா தொடங்கியது. ஆனால் குஜராத்தில் நடந்த விழா மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றிலும் இந்த விழா நடத்தப்பட்டது.
இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான தொங்கு பாலம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாகும்.இந்த பாலத்தில் 500 பேர் ஒரே நேரத்தில் அந்த பாலத்தில் நின்றதால் பாரம் தாங்க முடியாதபடி பாலத்தில் தொய்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில் சில இளைஞர்கள் தொங்கு பாலத்துக்குள் வேகமாக குதித்ததாகவும், ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நேற்றுமாலை 6.42 மணிக்கு தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. பிறகு 7.30 மணிக்குத்தான் முழுமையான மீட்பு பணிகள் தொடங்கின. நள்ளிரவு வரை சுமார் 60 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி விடிய விடிய நடந்தது.இன்று காலை வரை நடந்த கணக்கெடுப்பின்படி தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.