• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தனது ரசிகருக்கு டீ போட்டுக்கொடுத்த நடிகர் விக்ரம்- வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Oct 29, 2022

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். நடிகர் கமல் போலவே கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப தோற்றத்தை மாற்றியமைத்து அற்புதமாக நடிக்கும் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் அண்மையில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரு திரைப்படங்கள் வெளிவந்தன. அதில் பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனை நம் கண்முன் நிறத்தியது அவரது நடிப்பு. மேலும் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், பல வருடங்களுக்கு முன் தன்னுடைய படத்திற்காக மக்கள் மத்தியில் சென்று விக்ரம் ப்ரோமோஷன் செய்துள்ளார்.
அப்போது தனது ரசிகர் ஒருவருக்கு அவரே தனது கையில் டீ போட்டு கொடுத்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.