• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஏழுமலையானை தரிசிக்க 40 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் பக்தர்கள்

ByA.Tamilselvan

Oct 7, 2022

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 40 மணிநேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்
திருப்பதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர் விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இலவச தரிசன வரிசை சீலா தோரணம் வரை 5 கி. மீ தூரத்திற்கு வரிசையில் காத்துக்கொண்டு உள்ளனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 40 மணிநேரம் வரை ஆகிறது. திருப்பதியில் அடிக்கடி லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குளிர் காற்று வீசுவதால் வரிசையில் காத்திருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை குளிரில் நடுங்கியபடி வரிசையில் நின்று கொண்டு உள்ளனர்.