• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலங்கை சென்ற சுப்பிரமணியன் சுவாமி ராஜபக்சே சகோதரர்களை சந்தித்தார்…

Byகாயத்ரி

Sep 30, 2022

பாஜக தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை சென்று அவர் சமீபத்தில் பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் சந்தித்து பேசியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் கலந்து கொண்டதாகவும் அப்போது கோத்தபாய ராஜபக்சே, மஹிந்த ராஜபக்சே ஆகிய இருவருடனும் இலங்கை அரசியல் குறித்து பேசியதாகவும் ராஜபக்சே குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் பதவி விலகிய கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவை சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி ராஜபக்சே நாட்டை விட்டு மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். பின்னர் சிங்கப்பூர் சென்று தாய்லாந்து சென்றார். தற்போது பலத்த பாதுகாப்புடன் கொழும்பில் தங்கியுள்ளார். வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவுடன் சென்ற சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் தினேஷ் குணவர்தனவை சனிக்கிழமை சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.