• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் குறுஞ்செய்தி !! போலீசார் நடவடிக்கை

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் புகைப்படத்தை முகப்பு படமாக கொண்டு 8383032114 என்ற எண்ணில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த குறுஞ்செய்திகளில் பொதுமக்களை அரசு அலுவலர்களை நலம் விசாரிப்பது போன்றும் அனுப்பப்படுகிறது.மேலும் தவறான செயல்களை செய்திடும் நோக்கில் அனுப்படுவதாக தெரிகிறது.
அதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் க வனத்திற்கு அலுவலர்கள் எடுத்துச்சென்றதன் பெயரில் உடனடியாக காவல்கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்ட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டுவருகிறது.இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 80887 65749 மற்றும் 7207912008 என்ற எண்களிலிருந்து மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் புகைப்படத்தை முகப்பு படமாக கொண்டு போலிகணக்குகள் உருவாக்கிய நபர்கள் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அரசால் வழங்கப்பட்ட (சி.யூ.ஜி. எண்) 9444172000 என்ற செல்போன் எண் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே வேறு எண்ணில் இருந்து ஆட்சியரின் பெயரில் தவறான செய்திகள் மற்றும் தவறான வேண்டுகோள்கள் ஏதேனும் வந்தால் ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.