• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமராவதி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

ByA.Tamilselvan

Sep 24, 2022

நாளை முதல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தகவல்.
தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிப்பில் : திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளிலுள்ள நிலங்களுக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. அமராவதி ஆற்று மதகு வழியாக 5,443 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 2661 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 8104 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நாளை (25.09.2022) முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. 07.02.2023 வரை 135 நாட்களுக்கு (70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் அடைப்பு) என்ற அடிப்படையில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.