• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயிலில் இறைவனை பூஜிக்கும் சூரியக்கதிர்கள்

Byகுமார்

Sep 21, 2022

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு உட்பட்ட தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியக்கதிர் நேரடியாக கருவறைக்கு விழுந்து இறைவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது . இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் .
இந்திரனின் வாகனமான வெள்ளை யானை (ஐராவதம் ) சாபவிமோசனம் பெற்ற ஸ்தலமானதும் , மதுரையிலுள்ள பஞ்சபத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகவும் விளங்கும் மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில் சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் சிறப்பு பெற்ற ஒன்றாகவும் விளங்கி வருகிறது . அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 நாட்களும் , செப்டம்பர் மாதம் 12 நாட்களும் என வருடத்தின் இரண்டு முறை சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது .
சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இந்த நாட்கள் விசேஷமாகச் சிறப்பிக்கப்பட்டு , அவ்வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
மேலும், சூரிய பூஜை நிகழும் அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் வணங்கி வழிபட்டால் மேன்மை அடையலாம் என கருதப்படுவதால் , இந்நிகழ்வினை காண மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.