• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சினிமாவிலிருந்து விலகும் நயன்.. காரணம் இதுதானாம்…

Byகாயத்ரி

Sep 3, 2022

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இரண்டாவது ஹனிமூன் சென்றுள்ளனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது ஒப்பந்தம் செய்திருக்கும் படங்களை நடித்து முடித்துவிட்டு, நடிப்பில் இருந்து விலகப்போவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் நயன்தாராவின் குடும்பத்தினர் படப்பிடிப்பின் போது தாலியை கழட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார்களாம். இதனால், தற்போது நயன்தாரா நடித்து வரும் படங்களில் கூட அவர் தாலியை கழட்டாமலே நடித்து வருகிறாராம். பல கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கண்டிப்பாக தாலியை கழற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதினால், நடிகை நயன்தாரா நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளாராம்.இதன்பின் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தை கவனித்துக்கொள்ள நயன்தாரா முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.