• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ட்விட்டரில் ட்ரெண்டாகும் “ஒரு வார்த்தை” ட்விட்!!!!

Byகாயத்ரி

Sep 3, 2022

ட்விட்டரில் திடீரென ஒரு வார்த்தை ட்விட் வைரல் ஆகி வருவது டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆம்ட்ராக் என்ற ரயில் நிறுவனம் ட்ரெயின் என்ற ஒரே ஒரு வார்த்தையை ட்விட் செய்த நிலையில் பலரும் இதே போன்று ஒரே ஒரு வார்த்தையில் ட்விட் செய்து வருகின்றனர்.

வெளிநாட்டு தலைவர்கள் முதல் உள்நாட்டு தலைவர்கள் வரை இந்த “ஒரு வார்த்தை” ட்ரெண்டிங்கில் களம் இறங்கியுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் “திராவிடம்” என்று பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “தமிழ்த்தேசியம்” என்றும், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “தமிழன்” என்றும் பதிவிட்டுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் “சமூகநீதி” என பதிவிட்டுள்ள நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் “சனநாயகம்” என பதிவிட்டுள்ளார். அதிமுக ட்விட்டர் பக்கத்தில் ”எடப்பாடியார்” என பதிவிடப்பட்டுள்ள நிலையில், அமமுக டிடிவி தினகரன் “அம்மா” என்று பதிவிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “மக்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் பல அரசியல் பிரபலங்களும் இந்த “ஒரு வார்த்தை” ட்ரெண்டிங்கில் பதிவிட்டு வருகின்றனர்.