• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு…

Byகாயத்ரி

Sep 2, 2022

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்டுகிறது.

முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் 23 – க்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.