• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..

Byகாயத்ரி

Aug 26, 2022

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திம் தெரிவித்துள்ளது.

கோடநாடு வழக்கில் கனகராஜின் செல்போன் பதிவுகள், தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. தகவலை சேகரிக்க டிராயின் அனுமதி கேட்ட நிலையில், ஒத்துழைப்பு அளிக்கப்படாமல் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயான், வாளையார் மனோஜ். உதயன், ஜித்தன் ஜாய் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 303 பேரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி உள்ளது. இதனிடையே, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேடின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.