• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் சிறந்த மலை விருதை நீலகிரி-குன்னூர் வென்றுள்ளது.

ByA.Tamilselvan

Aug 26, 2022

அவுட்லுக் டிராவலர் விருதுகள் 2022இல், இந்தியாவின் சிறந்த மலை/மலைக் காட்சிகள் இடத்திற்கான வெள்ளி விருதை தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் குன்னூர் வென்றுள்ளது.
அவுட்லுக் விருதுகள் பயண மற்றும் சுற்றுலாத் துறையில் தரத்தின் அளவுகோலை குறிக்கின்றன. பல ஆண்டுகளாக, இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோர்களை ஈர்த்துள்ளது.
சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலம், சிறந்த வனவிலங்குத் தலம், சிறந்த சாகச தலம், சிறந்த விழாத் தலம் உள்ளிட்ட 11 வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கான வெள்ளி விருதினை, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி வழங்கினார். டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.