• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சந்தோஷ் நாராயணனின் மலிவான அரசியல்

தாமரை செல்வன்

2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம்.அப்படம் பெரிய வெற்றி பெற்று இருவருக்கும் திரையுலகில் சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்தது.அதன்பின், பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய 5 படங்களுக்கும் இசை சந்தோஷ் நாராயணன்தான்.

இப்படங்களிலும் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து வெற்றிக்கூட்டணியாக வலம்வந்து கொண்டிருந்தனர்.அந்தக் கூட்டணியில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

அதற்குக் காரணம், 2021 மார்ச் மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற என்ஜாயி எஞ்சாமி பாடல்தான்.அப்பாடலை சந்தோஷ்நாராயணன் மகள் தீ மற்றும் பாடலாசிரியர் அறிவு ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கியிருந்தனர்.

ஆனால், அந்தப்பாடல் குறித்த செய்திகளிலெல்லாம் அறிவு இருட்டடிப்பு செய்யப்பட்டார்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ரோலிங்ஸ்டோன் மாத இதழில், என்ஜாயி எஞ்சாமி பாடல் குறித்த கட்டுரை வெளியானது. அதில் தீ படம் மட்டும் இருந்தது. அறிவு படம் இடம் பெறவில்லை.

இதனால் அறிவு கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அவருக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் மோதல் உருவானது. இந்த விசயத்தில் அறிவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார் இயக்குநர் பா.இரஞ்சித்.அதோடு, அதுவரை அவர் படங்களுக்கு இசையமைத்துவந்த சந்தோஷ்நாராயணனை மாற்றிவிட்டு தென்மாவை தன்னுடைய படத்துக்கு இசையமைப்பாளர் ஆக்கினார் பா.இரஞ்சித்.

அதன்பின் அண்மையில் மிகப்பிரமாண்டமான முறையில் சென்னையில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியை ஒட்டிய விழாவில், என்ஜாயி எஞ்சாமி பாடல் பாடப்பட்டது. தீ மற்றும் மாரியம்மாள் ஆகியோர் அந்தப்பாடலைப் பாடினர். அந்நிகழ்வுக்கும் அறிவு அழைக்கப்படவில்லை.

இப்படி தொடர்ந்து அறிவைப் புறக்கணித்து வரும் சந்தோஷ்நாராயணன் மீது பா.இரஞ்சித் மற்றும் அவருடைய குழுவினர் கோபத்தில் இருக்கின்றனர்.அதன்பின்னாவது மனம் மாறி உழைத்தவருக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்று சந்தோஷ்நாராயணன் நினைக்கவில்லை.

மாறாக, பா.இரஞ்சித்துக்கு எதிராக அரசியல் செய்ய விழைந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்அண்மையில், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனின் அறுபதாவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அந்த மேடைக்குத் திடீரென தன் மனைவியுடன் வந்திருக்கிறார் சந்தோஷ்நாராயணன். தலைவருக்கு வாழ்த்துச் சொல்லவேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அவரை திருமாவளவனுக்குத் தெரியவில்லையாம். அருகிலிருந்தவர்கள், இவர் கபாலி, காலா ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்று சொல்லி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

அதன்பின் அவருடைய வாழ்த்தை ஏற்றுக்கொண்டு அவருக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்திருக்கிறார் திருமாவளவன்.
இந்நிகழ்வு,சந்தோஷ்நாராயணனின் மலிவான அரசியல் என்கிற விமர்சனங்கள்வரத்தொடங்கியிருக்கின்றன.ஏனெனில், பா.இரஞ்சித் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு எதிரான கருத்து கொண்டவர் என்கிற கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

அதைநம்பி, எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் அழையா விருந்தாளியாக திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்து அரசியல் செய்திருக்கிறார் என்று சந்தோஷ்நாராயான் மீது விமர்சனங்கள் வருகின்றன.
இசைத்துறையில் இருக்கும் சந்தோஷ்நாராயணன் அதேதுறையில் இருக்கும் அறிவுக்குச் செய்யும் துரோகத்தை மூடிமறைக்கவும் அறிவு, பா.இரஞ்சித் உள்ளிட்டோரின் கோபப்பார்வையில் இருந்து தப்பவுமே திருமாவளவனிடம் சரணடைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.