• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தொழிலாளி சரமாரியாக வெட்டி கொலை

Byமகா

Aug 22, 2022

மதுரையில் நள்ளிரவில் மயான தொழிலாளியை கொலை செய்து தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள அரிஜனா குடியிருப்பில் வசித்து வந்த அய்யனார் (வயது 58). பொன்மேனி பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பொன்மேனி ஜெய் நகர் பகுதியில் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.