• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாளின் 110 வது ஆண்டு பிறந்த தினம் – விஜய் வசந்த் மரியாதை

Byமதி

Sep 26, 2021

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கடற்கரை கிராமத்தில் பிறந்த லூர்தம்மாள் 1957 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குளச்சல் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று 1957 முதல் 62 வரை காமராஜர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். அவர் ஆட்சிக் காலத்தில் அவருடைய முயற்சியில் 1958ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் என்ற புதிய சட்டம் உருவானது.

இதன் மூலம் அதிகாரம் படைத்த மாவட்ட ஆட்சிக் குழுக்கள் கலைக்கப்பட்டு கிராமம், ஒன்றியங்கள் அளவில் பஞ்சாயத்து கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகங்களில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அத்தகைய பெருமை சேர்த்த லூர்தம்மாள் 1911 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி இயற்கை எய்தினார்.

அவருடைய 110 ஆவது ஆண்டு நினைவு தினமான இன்று கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அனுசரிக்கப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில், கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் லூர்தம்மாள் புகைப்படத்திற்கும், கவிமணியின் 67வது பிறந்த நாள் ஆண்டு தினத்தை முன்னிட்டும் இருவருடைய புகைப்படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

செய்தியாளர் : சுரேந்திரன்