• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..

Byகாயத்ரி

Aug 8, 2022

மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் தயாரிப்பாளர் பொன்ராஜ் கலந்துக்கொண்டார். அதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக நிலைநாட்ட சில கோரிக்கைகளை முன்னெடுத்தார்.

1) முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை 10.5% உள்ஒதுக்கீடு மேல் முறையீடு SC வகுப்பில் செய்யகூடாது. அப்போது தான் அனைத்து மக்களுக்கும் நியாயமான சமூக நீதி உறுதிப்படுத்தப்படும்.

2) அளவிடக்கூடிய சாதி வாரி கணக்கெடுப்பை (Quantifiable caste wise data) எடுக்காமல் அரசு தவறான ஆலோசனையின் பேரில் ஒரு சில சமூகங்களை ஏமாற்றுவதற்காக மேல்முறையீடு செய்தால் Gayathiri vs TN state வழக்கில் உச்சநீதிமன்றம் 69% இட ஒதுக்கீட்டை தள்ளுபடி செய்து பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு 27% ஆக குறைந்துவிடும் நிலை ஏற்படும்.

3) 2000 ஆம் ஆண்டில் ரங்கராஜன் கமிஷன் பரிந்துரையில் Collection of statistics act 2008ன் படி தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பு (Socio, Educationally and Economically Backwardness) நடத்தலாம். எனவே சாதி வாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பொறுப்பு என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுங்க கூடாது.

4) இந்திய ஒன்றிய அரசு சென்சஸ்-ல் OBC (பிற பிற்படுத்தப்பட்டோர்) ஐயும் சேர்த்து எடுக்க மக்கள்தொகை கணக்கெடுக்க நிர்பந்திக்க வேண்டும். எம்.ஜி.ஆரால் நிராகரிக்கப்பட்ட போலியாக உருவாக்கபட்ட அம்பாசங்கர் கமிஷனின் அறிக்கையை வைத்து இனியும் தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று சொன்னால் அது கேலிக் கூத்தாகும்.

வாக்கு அரசியலை வைத்து எடப்பாடி பழனிச்சாமி விளையாடி அஇஅதிமுக ஆட்சியை இழந்ததை நினைவில் கொண்டு, அனைத்து மக்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் 145 சமூகத்தை சேர்ந்த 20,000 மக்கள் கூடி மதுரையில் வைத்த சமூக நீதி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.