• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழகம் வந்தது செஸ்ஜோதி

ByA.Tamilselvan

Jul 25, 2022

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி, நாடு முழுவதும் பயணித்து, போட்டி நடைபெறும் தமிழகம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த 2000-க்கும் வீரர் – வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
நாட்டின் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி இன்று தமிழ்நாடு வந்தடைந்தது.கோவைக்கு வந்த செஸ் ஜோதியை 4 ஆயிரத்திற்கும் மேறப்பட்டமாணவ,மாணவிகள் வரவேற்றனர். செஸ்ஒலிம்பியாட்ஜோதி வந்ததையொட்டி கோவை பந்தய சாலை முதல் கொடிசியா அரங்கம் வரை மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இந்த ஜோதியானது வரும் 28ம் தேதி சென்னை வந்தடையும்.